தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

ஒரு நாயை வளர்ப்பவன், அதை அன்புடன் பேணாமல், கடை வாயிலை அடைத்து வைத்துக் கொண்டு அதை அடித்தானென்றால், அந்த நாயும் தன் சொந்தக்காரனான அவனைக் கடித்துவிடும்.

தினமணி

ஆற்றார் இவர்என்று அடைந்த தமரையும்
தோற்றத்தாம் எள்ளி நலியற்க- போற்றான்
கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
உடையாளைக் கவ்வி விடும். (பாடல்-252)


ஒரு நாயை வளர்ப்பவன், அதை அன்புடன் பேணாமல், கடை வாயிலை அடைத்து வைத்துக் கொண்டு அதை அடித்தானென்றால், அந்த நாயும் தன் சொந்தக்காரனான அவனைக் கடித்துவிடும். ஆகவே, தாம் வறுமையுற்று வந்து தம்மைப் புகலாக அடைந்த உறவினரையும், "இவர் நம்மை எதிர்க்க வலியில்லாதவர்' என்று கருதி பிறருக்கு வெளிப்பட இகழ்ந்து பேசி எவரும் அவரை வருந்தாமல் இருக்க வேண்டும்.

"கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சபரிமலை சீசன்! சிறப்புப் பேருந்துகளை அறிவித்தது போக்குவரத்துக் கழகம்!!

டீ- ஏஜிங் ஸ்டார்... மலைக்கா அரோரா!

பிகாரில் பஞ்ச பாண்டவர் கூட்டணி: அமித் ஷா

களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது: அமைச்சர் கே.என்.நேரு

இந்தப் புன்னகை என்ன விலை... சந்தீபா தர்!

SCROLL FOR NEXT