முகப்பு
தமிழ்மணி

குறள் கூறும் சொல்!

பொருள் வருகின்ற நெறியைத் தான் ஆகுஆறு என்கிறார் பரிமேலழகர். பொருள் வரும்வழி என்கிறார் மணக்குடவர். போகு ஆறு என்பதற்குச் செலவு செய்தல், பொருள் போகின்ற நெறி அளவு எனக் குறிக்கப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

(சென்றவார தொடர்ச்சி...)

ஆகு ஆறு - Way of Income
போகு ஆறு - Way of Expenditure 

"ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை' (குறள்-478)

பொருள் வருகின்ற நெறியைத் தான் ஆகுஆறு என்கிறார் பரிமேலழகர். பொருள் வரும்வழி என்கிறார் மணக்குடவர். போகு ஆறு என்பதற்குச் செலவு செய்தல், பொருள் போகின்ற நெறி அளவு எனக் குறிக்கப்படுகிறது.


இலக்கம் (Target)

"இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
 கையாறாக் கொள்ளாதாம் மேல்' (குறள் 627)

இதில் செந்நாப்போதார் இலக்காகும் குறிப்பொருளை இலக்கம் என்கிறார். எனவே, ஹண்ம் என்பதற்கும் ற்ஹழ்ஞ்ங்ற் என்பதற்கும் இலக்கு என்பதையே பயன்படுத்துவதைக்காட்டிலும் ற்ஹழ்ஞ்ங்ற் என்பதற்கு இலக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது சிறந்தது.

இணர் (Bouquet)

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
 புணரின் வெகுளாமை நன்று (குறள்- 308)

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார் (குறள்- 650)

இங்கு இணர் என்று கையாளப்பட்ட சொல்லே இன்று வழக்கத்தில் உள்ள பூங்கொத்து (Bouquet) ஆகும். தனித்தமிழ் கலைச்சொற்கள் எத்துணை அழகானவை. அவற்றையெல்லாம் விடுத்து நாம் பேசுவதும் எழுதுவதும் "கனியிருப்பக் காய்கவர்ந் தற்று' என்பதையே நினைவுகொள்ளச் செய்கிறது.


பூ, காய், கனி கலைச்சொற்கள்

மலரானது பூ, வீ, போ, அலர் என்றும் பூங்கொத்தானது துணர், மஞ்சரி, தொத்து, இணர் என்றும், குலையானது தாறு, வல்லரி என்றும், பழமானது பலம், காய், கனி என்றும் பெயர் பெறும்.

மணமலி பூவீ மலர்போது அலராம்
துணர் மஞ்சரி கொத்துத் தொத்தோடு இணராம்
நலம் சேர் குலைதாறு வல்லரியாகும்
பலம் காய் கனியாகும் பழம் (உரிச்சொல் நிகண்டு பா.94)

இதையே வள்ளுவப் பெருந்தகையும்,

காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய் (குறள்-1227)

என ஒரு குறளிலேயே அரும்பு, போது, மலர் என பூவின் வெவ்வேறு நிலைக்குரிய கலைச்சொற்களைக் குறிப்பிடுகிறார்.

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →