பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
மிக மெல்லிய இலைத்தளிராக இருந்தாலும் அதனைக் கிழிக்க வேண்டும் எனில் அதன் மேலே உளியை வைத்துத் தட்டினால்தான் முடியும்.
விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டாது அவரை வியங்கொள வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்,
கொட்டாமல் செல்லாது, உளி. (பாடல்: 279)
மிக மெல்லிய இலைத்தளிராக இருந்தாலும் அதனைக் கிழிக்க வேண்டும் எனில் அதன் மேலே உளியை வைத்துத் தட்டினால்தான் முடியும். அதுபோலச் சிறிய செயலாக இருப்பினும் ஒருவரிடம் அச்செயலை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடுதல் கூடாது. அவரை இடைவிடாமல் ஏவி நினைவூட்டிக் கொண்டே இருத்தல் வேண்டும்.