பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
பாண்டவர்கள், தீயில் எரிந்து சாகவேண்டும் எனத் திட்டமிட்டுக் கட்டப்பெற்ற அரக்கு மாளிகையில் இருந்து பொய் சொல்லாப் பண்புடைய ஐவரும் தப்பினர்.
குரைத்துக் கொளப்பட்டார் கோள் இழுக்குப்பட்டு,
புரைத்து எழுந்து போகினும் போவர், அரசுக்கு இல்லுள்
பொய் அற்ற ஐவரும் போயினர் - இல்லையே,
உய்வதற்கு உய்யா இடம். (பாடல்: 280)
பாண்டவர்கள், தீயில் எரிந்து சாகவேண்டும் எனத் திட்டமிட்டுக் கட்டப்பெற்ற அரக்கு மாளிகையில் இருந்து பொய் சொல்லாப் பண்புடைய ஐவரும் தப்பினர். எனவே, வஞ்சகரால் பொய்யாகக் குற்றம் சாற்றப் பெற்றுப் பிணித்துக்கொள்ளப் பெற்றவர், அவ் வஞ்சகப் பிணியிலிருந்து தப்பிச் செல்வர். ஆகவே, பிழைக்கும் உயிரை அடைத்துவைக்க இடம் எங்கும் இல்லை.