முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

கொடையாகப் பெற்ற பொருளைக் கொடுத்தவர் திரும்பப் பெற விரும்புவாரே யானால், முற்றும் துறந்த முனிவர்க்கும் திரும்பக் கொடுக்க மனம் வராது.

Updated On : 20 ஆகஸ்ட், 2023 at 6:56 PM
பகிர்:

காப்பு இறந்து ஓடி, கழி பெருஞ் செல்வத்தைக்
கோப் பரியான் கொள்ளின், கொடுத்து இராது என் செய்வர்?
நீத்த பெரியார்க்கே ஆயினும், ஈத்தவை
மேவின், பரிகாரம் இல்.      (பாடல்: 320)


கொடையாகப் பெற்ற பொருளைக் கொடுத்தவர் திரும்பப் பெற விரும்புவாரே யானால், முற்றும் துறந்த முனிவர்க்கும் திரும்பக் கொடுக்க மனம் வராது. அது போல நாட்டை ஆளும் அரசன் தம் ஆட்சி அமைவால் மக்கள் அடைந்த செல்வம்தானே என்று கருதி அரசாட்சி செய்யும் முறையை மீறி, மக்களிடம் இருந்து வரியாகத் தண்ட விரும்பினால் மக்கள் கொடாது என்செய்வர்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.