முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மற்றவரைக் கடித்துத் துன்பம் தரும் இயல்புடையது பாம்பு. எனினும், பாம்பு சான்றோர்கள் கூடி இருக்கும் சபையிலே புகுந்து விடுமேயானால் சான்றோர்களால் அது அடிக்கப்படுவதும் இல்லை, கொல்லப்படுவதும் இல்லை.

Updated On : 2 ஜூலை, 2023 at 5:47 PM
பகிர்:

தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால்,
மற்றும் கண்ணோடுவர், மேன்மக்கள்  தெற்ற
நவைக்கப்படும் தன்மைத்து ஆயினும், சான்றோர்,
அவைப்படின், சாவாது பாம்பு.     (பாடல்: 313)

மற்றவரைக் கடித்துத் துன்பம் தரும் இயல்புடையது பாம்பு. எனினும், பாம்பு சான்றோர்கள் கூடி இருக்கும் சபையிலே புகுந்து விடுமேயானால் சான்றோர்களால் அது அடிக்கப்படுவதும் இல்லை, கொல்லப்படுவதும் இல்லை. விரட்டப்படும் அவ்வளவே. அதுபோலத் தீமை செய்வதையே தெளிவான தொழிலாகக் கொண்ட பகைவர் சான்றோர்க்குத் துன்பங்களைத் தந்தபோதிலும் சான்றோர் அத்தீயோர் மீது கருணையே காட்டுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.