மடியை வியங்கொள்ளின், மற்றைக் கருமம்
முடியாதவாறே முயலும்- கொடி அன்னாய்
பாரித்தவனை நலிந்து தொழில் கோடல்
மூரி எருத்தான் உழவு. (பாடல்: 389)
கொடி போன்றவளே! ஒரு சோம்பேறி வழியாக ஒரு செயலைச் செய்து முடிக்க முயன்றால், அவன் அச்செயல் முடியாது இருக்கும்படி காலம் கடத்துவான். அதனை மீறி அவனைக் கண்டித்து வலிய செயலை முடிக்க முனைவது கிழமாட்டை அடித்து உதைத்து ஏரில் கட்டி உழுவதற்கு ஒப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.