தமிழ்மணி

பகிர்ந்து உண்க!

செல்வம் எவரிடத்தும் நிலையாக நிற்பதில்லை. வண்டிச் சக்கரத்தின் ஆர்க்கால்கள் போல மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி இடம் மாறிக் கொண்டே போகின்ற இயல்பினை உடையது செல்வம்.

DIN

துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டும்

பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க

அகடுஉற யார்மட்டும் நில்லாது, செல்வம்

சகடக்கால் போல வரும்.

(பாடல் 2, அதிகாரம்: செல்வம் நிலையாமை)

செல்வம் எவரிடத்தும் நிலையாக நிற்பதில்லை. வண்டிச் சக்கரத்தின் ஆர்க்கால்கள் போல மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி இடம் மாறிக் கொண்டே போகின்ற இயல்பினை உடையது செல்வம். அதனால் நெல்விளைவாகிய குற்றமற்ற பெருஞ்செல்வமானது விளைந்து தோன்றிய காலத்திலே அதனைச் சேமித்து வைக்காமல் அனைவரும் பசியின்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் பலருடன் கூடி பகிர்ந்து உண்பீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT