தக்கோலந் தின்று, தலை நிறையப் பூச்சூடிப்,
பொய்க்கோலஞ் செய்ய, ஒழியுமே } 'எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும்' எனப் பெரியோர்
கண்டு, கை விட்ட மயல்?
(பாடல் 43 அதிகாரம்: தூய்து அன்மை)
எப்பொழுதும் உணவுண்ணலாகிய செயலினாலேயே உறுதி பெறும் என்று, அறிவிலே பெரியவர்கள் உண்மையை அறிந்து பார்த்துத் தள்ளிவிட்ட செத்தையாகும் இந்த உடம்பு.
இதனைத் தக்கோலம் என்னும் மணப்பொருளைத் தின்றும், தலை நிறைய பூச்சூடியும், பொய்யாகப் புனைந்து புனைந்து கோலஞ் செய்து கொண்டாலும், இதன் கெட்ட நாற்றம் முழுவதும் ஒழிந்து விடுமோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.