முகப்பு
தமிழ்மணி

யாருக்கு முக்தி கிடைக்கும்?

'மெய் வாய் கண் மூக்குச் செவி' என்னும் பெயர் கொண்ட ஐந்து புலன்களின் வழியாக எழுகின்ற வேட்கை என்னும் ஆசையினை...

பகிர்:

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற

ஐவாய வேட்கை அவாவினைக்,}கைவாய்,

கலங்காமற் காத்து, உய்க்கும் ஆற்றல் உடையான்

Advertisement

Advertisement

விலங்காது வீடு பெறும்.

(பாடல் 59 அதிகாரம்: துறவு)

'மெய் வாய் கண் மூக்குச் செவி' என்னும் பெயர் கொண்ட ஐந்து புலன்களின் வழியாக எழுகின்ற வேட்கை என்னும் ஆசையினை, அதனால் தன் மனம் கலங்காமற் காத்துக் கொண்டவனாகத் துறவு ஒழுக்கத்திலே அந்த மனத்தைச் செலுத்துகின்ற ஆற்றல் உடையவன் எவனோ அவன் தப்பாமல் வீட்டின்பத்தைப் பெற்று விடுவான். 'புலனிச்சைகளினால் மனம் சிதறாமற்படிக்கு, உள்ளத்து உறுதியுடன் தவநெறியிலே ஈடுபடுகிறவன் தவறாமல் முத்தியடைவான்; பிறர் அடையார்' என்பது கருத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.