வெள்ளிமணி

சைவமும் வைணவமும்!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது ஆபரணநல்லூர் என்ற அலவாக்கோட்டை. இங்கே லட்சுமி விநாயகரும், ஸ்ரீநிவாசப் பெருமாளும் அருகருகே கோயில்கொண்டு அருள்பாலிக்கின்றனர். விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்

குமரன்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது ஆபரணநல்லூர் என்ற அலவாக்கோட்டை. இங்கே லட்சுமி விநாயகரும், ஸ்ரீநிவாசப் பெருமாளும் அருகருகே கோயில்கொண்டு அருள்பாலிக்கின்றனர். விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வேஸ்வரப் பெருமான் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை நல்குகிறார். வள்ளி - தேவசேனா சமேத சுப்ரமணியரும் வீற்றிருக்கிறார். ஏனைய பரிவார மூர்த்திகளும் உள்ளனர்.

ஸ்ரீஅலமேலு மங்கை தாயார், ஸ்ரீஆண்டாள் சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் அழகிய தோற்றத்துடன் அருள்கிறார். இக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் தீராத துன்பங்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 14 ஆண்டுகளாக ஆஞ்சநேயர் ஜெயந்தி லட்சார்ச்சனையுடன் நடைபெறுவது சிறப்பு. கடந்த 10 ஆண்டுகளாக அன்னதானத்துடன் சுதர்சன ஹோமமும் நடைபெறுகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு, இவ்விரு திருக்கோயில்களும் தோற்றுவிக்கப்பட்டதன் நூற்றாண்டு விழா மிகச்சிறப்பாக நடந்தது. தற்போது வருகிற மே 31ஆம் தேதி இவ்விரு கோயில்களுக்கும் குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணி வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. சைவமும் வைணவமும் அருகருகே உள்ள அலவாக்கோட்டை சென்று வழிபட்டு பேரானந்தம் அடைவோம்.

மேலும் தகவலுக்கு 94440 52168.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆண்டர்சன் - பவுமா: எஸ்ஏ20 ஏலத்தில் தேர்வாகாத நட்சத்திர வீரர்கள்!

கடை கண்ணாலே ரசித்தேன்... பவித்ரா லட்சுமி!

குஜராத் முதல்வருடன் இஸ்ரேல் நிதியமைச்சர் சந்திப்பு!

ஏஞ்சல்... கிகி விஜய்!

SCROLL FOR NEXT