வெள்ளிமணி

சிவன் கொடுத்த வரம்!

ஆனை முகம்கொண்ட கஜாசுரன் என்னும் அசுரன் கடும் தவத்தில் ஈடுபட்டான். சிவபெருமானிடம் ஏகப்பட்ட வரங்களையும் பெற்றான்.

தினமணி

ஆனை முகம்கொண்ட கஜாசுரன் என்னும் அசுரன் கடும் தவத்தில் ஈடுபட்டான். சிவபெருமானிடம் ஏகப்பட்ட வரங்களையும் பெற்றான். அதுமட்டுமின்றி சிவனே தன் வயிற்றில் வசிக்க வேண்டுமென வரம் கேட்க, அதற்கு ஈசனும் இசைந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பார்வதி தன் கணவரை மீட்டுத் தருமாறு சகோதரரான விஷ்ணுவை பிரார்த்தித்தார். விஷ்ணு ஒரு மேளக்காரர் வேடத்துடன் சிவனின் வாகனமான நந்தி தேவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு மேள தாளங்கள் வாசித்தபடி கஜாசுரனிடம் சென்றார்.

அவரது வாசிப்பில் மயங்கிய அசுரன் "உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்?' என்று கேட்க, மேளக்காரன் வேடத்தில் இருந்த விஷ்ணுவும் சிவபெருமான் வேண்டும் என்றார். அசுரனும் ஏதும் செய்வதறியாமல், அதேசமயம் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் தனது வயிற்றைக் கிழித்து சிவபிரானை விடுவித்தான். வெளியில் வந்த சிவபெருமான் கோபம் கொண்டு அவனது யானைத் தலையைக் கொய்தார். ஏற்கெனவே வெற்று உடலாகத் தன்னால் கயிலையில் கிடத்தப்பட்ட குழந்தைக்கு அந்தத் தலையைப் பொருத்தினார். அந்தக் குழந்தைக்கு கணங்களுக்கான தலைமைப் பொறுப்பையும் கொடுத்தார். கணபதி, விநாயகர் என்ற பெயரும் சூட்டினார். விநாயகர் தோற்றத்துக்கு இப்படியும் ஒரு புராணக் கதை உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

SCROLL FOR NEXT