முகப்பு
வெள்ளிமணி

ஜோதியாய் அருளும் ஸ்வரூபிணி!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அன்பிலில் இருக்கிறது ஸ்ரீ பிரம்ம ஸ்வரூபிணி அம்பாள் ஆலயம்.

Updated On : 16 மே, 2013 at 4:51 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:16 PM

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அன்பிலில் இருக்கிறது ஸ்ரீ பிரம்ம ஸ்வரூபிணி அம்பாள் ஆலயம். இவ்வாலயம் ஜோதி வழிபாட்டைக் கொண்டது. சாதி, சமய பேதமின்றி அனைவரும் இந்தக்  கோயிலின் கருவறை வரை சென்று திருவிளக்கில் நெய் இட்டு ஜோதியை வழிபடலாம் என்பது தனிச்சிறப்பு. கல்லால் ஆன அந்த விளக்குக்கு அவ்வப்போது வெள்ளிக் கவசமும் சாத்தப்படுகிறது.  கருவறைக்கு வெளியே அமர்ந்து வழிபட சிறிது இடம், சுற்றிலும் நல்ல - அரிய மரங்கள் இவைதான் கோயில் வளாகம். கோயிலுக்கு எதிரே அன்னதானம் செய்ய முன்வருவோருக்கு சமையல்  கூடத்தையும், தங்குமிடத்தையும் அமைத்திருக்கிறார்கள். ஜோதியாய் அருளும் இந்த அம்பாளை வழிபட்டால் வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளி பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.