மாணவர்கள் புதுப்பித்த ஆலயம்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டி பட்டணத்தில் சுமார் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகதிராயப்பெருமாள் கோயில் உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டி பட்டணத்தில் சுமார் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகதிராயப்பெருமாள் கோயில் உள்ளது.
இந்த ஆலயம் ஆன்மிகமும், குருகுலக் கல்வியும் கற்றுத் தரும் பாடசாலையாகவும் பல ஆண்டுகளாக புகழ்பெற்று விளங்கியது.
இந்தப் பாடசாலையில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். இவர்கள் பொதுமக்கள் ஆதரவுடன், முற்றிலும் சிதிலமடைந்த ஸ்ரீகதிராயப் பெருமாள் ஆலயத்தைப் புதிதாகக் கட்டும் பணியில் ஈடுபட்டனர். என்றாலும் திருப்பணிகள் மீதமுள்ள நிலையில் கடந்த பிப்: 12ஆம் தேதி மஹாசம்ப்ரோஷணம் நடைபெற்றது.
தகவலுக்கு: 99760 43031.