வெள்ளிமணி

குருபகவானின் சாரபலம்

DIN

குருபகவானின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்கள் முறையே, மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் என்கிற ஆறு ராசிகளில் பரவியுள்ளது. இந்த நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் கிரகங்கள் தங்களின் அசுப பலன்களைக் குறைத்தும் சுபப்பலன்களைக் கூட்டியும் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

குரு சஞ்சார பலனைக் கூட்டித் தரும் தாராபலன்:
தாரா பலன்: ஜன்ம நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணிக் கொண்டு வந்த தொகையை ஒன்பதில் கழித்து நின்ற மிச்சத்தில் 2,4,6,8,9 உத்தமம் என்று கூறப்பட்டுள்ளது. 

உதாரணம்: ஒருவரின் ஜன்ம நட்சத்திரம் அசுவினி என்று கொள்வோம். 
அசுவினி- மகம்- மூலம்- 1 ஜன்மம் ஆகும். பரணி- பூரம்- பூராடம்- 2 சம்பத்து .
கிருத்திகை- உத்திரம்- உத்திராடம் -3 விபத்து.  ரோகிணி - ஹஸ்தம் - திருவோணம்- 4 úக்ஷமம். மிருகசீரிஷம்- சித்திரை- அவிட்டம்- 5 காரிய நாசம். திருவாதிரை- சுவாதி- சதயம்- 6 சாதகம். புனர்பூசம்- விசாகம், பூரட்டாதி- 7 வதை. பூசம்- அனுஷம்- உத்திரட்டாதி - 8 மைத்திரம். ஆயில்யம்- கேட்டை- ரேவதி- 9 பரம மைத்திரம் ஆகும்.

இந்த துலாம் ராசி குருப்பெயர்ச்சி காலத்தில் குருபகவான் சித்திரை, சுவாதி, விசாக நட்சத்திரங்களில் சஞ்சரிப்பார். அசுவினி நட்சத்திரம் மேஷ ராசியில் வருகிறது. மேஷ ராசிக்கு ஏழாம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பது சிறப்பு. இங்கு சித்திரை நட்சத்திரம் ஐந்தாவது தாரையாகவும் (14 இருந்து 9 -ஐ கழிக்க வேண்டும்) சுவாதி நட்சத்திரம் ஆறாவது தாரையாகவும் (15 இல் இருந்து 9- ஐ கழிக்க வேண்டும்) விசாக நட்சத்திரம் ஏழாவது தாரையாகவும் ஆகி (11 இல் இருந்து 9 -ஐ கழிக்க வேண்டும்)  சித்திரை நட்சத்திரம் காரிய நாசமாகவும் சுவாதி நட்சத்திரம் சாதகமாகவும் விசாக நட்சத்திரம் வதையாகவும் வருகிறது. அதனால் குருபகவான் சித்திரை, விசாக நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் சுமாரான நல்ல பலன்களையும்; சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் அதி சிறப்பான பலன்களையும் தருவார் என்றுகூறவேண்டும்.  

வாசகர்களின் கவனத்திற்கு குருபகவான் துலா ராசியில் சஞ்சரிக்கும் நட்சத்திர காலங்கள் கீழே கொடுத்துள்ளோம். 

12.9.2017 முதல் 13.10.2017 வரை சித்திரை நட்சத்திரத்திலும்; 14.10.2017 முதல் 15.12.2017 வரை சுவாதி நட்சத்திரத்திலும்; 16.12.2017 முதல் 9.3.2018 வரை விசாக நட்சத்திரத்திலும்; 

பின்பு வக்கிர கதியில் 10.3.2018 முதல் 17.6.2018 வரை விசாக நட்சத்திரத்திலும்; தொடர்ந்து 11.7.2018 வரை சுவாதி 4 ஆம் பாதத்திலும் சஞ்சரித்துவிட்டு, வக்கிரம் நீங்கி நேர்க்கதியில் 12.7.2018 முதல் 1.8.2018 வரை சுவாதி நட்சத்திரத்திலும்; 2.8.2018 முதல் 11.10.2018 வரை விசாக நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

சிதம்பரத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT