மஹாகும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மருதாடு கிராமத்தில் புதியதாக கோயில்கொண்டு அருள்பாலிக்கும் அருள்மிகு முச்சந்தி ஸ்ரீ ஜெயவீர கணபதி ஆலயத்திற்கு, 14.12.2018, காலை 9.00 - 10.30 மணிக்குள், மாம்பட்டு சர்வ மங்களகாளி சித்தர் பீடம் சக்தி உபாசகர் அருள்திரு. இலட்சுமண சுவாமிகள் முன்னிலையில் மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 94445 07448.
சைவசமய சொற்பொழிவுகள்
சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதீன சமயப்பிரசார நிலையத்தில் டிசம்பர் 16 முதல் 2019 ஜனவரி 14 வரை நாள்தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாராயணம் மற்றும் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: 044 - 28142642.
ஸ்ரீ தத்தஜெயந்தி
திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரத்தில் உள்ள தத்தகுடீரத்தில் ஸ்ரீதத்த ஜெயந்தி மகோத்சவம் டிசம்பர் 18 தொடங்கி 23 வரை நடைபெறுகின்றது. இதனையொட்டி லட்சார்ச்சனை, ஸ்ரீ தத்த தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுன ஐபம் ஹோமம், ஸ்ரீ தத்த ஜெயந்தி வைபவம், தொட்டில் உற்சவம் (தத்தருக்கு பாலூட்டும் வைபவம்) பக்திப்பாடல்கள், திவ்யநாம பஜனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைப் பேறு வேண்டுபவர்கள் தொட்டில் உற்சவத்தில் பங்கேற்கலாம்.
தொடர்க்கு: நாகசுப்ரமணியன்- 94872 92481/ 04366 - 260819.
சம்பா சஷ்டி
அம்பத்துர் மேனாம்பேடு ஸ்ரீ அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ மனோன்மணி சமேத ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் சந்நிதி விசேஷமாக அமைந்துள்ளது. இங்கு, 3 -ஆம் ஆண்டு சம்பா சஷ்டி அந்தகாசூர சம்ஹார உற்சவம் டிசம்பர் 13 -ஆம் தேதி கருப்பங்குளக்கரையில் நடைபெற்றது. இன்று (டிசம்பர் 14) வாசனை திரவியங்கள் சாத்தும் வைபவமும் டிசம்பர் 15 -ஆம் தேதி மகாபிஷேகம், அன்னப்படையல் வைபவங்களும் நடைபெறுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.