பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒழுக்கத்தைக் கண்டு உறவுகொள்ளுங்கள். பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவுகொள்வது பிழை.
- தாயுமானவர்
அக்கினி முதலிய தேவர்கள் பிரம்மச்சரியத்தின் உதவியால்தான் மரணத்தை வென்றார்கள்.
- அதர்வணவேதம்
உன்னைத் தேடி உன் வீட்டிற்கு எவர் வந்தாலும் அவரைப் போகச் சொல்லாதே. இது விரதம்.
- தைத்திரீய உபநிஷதம்
பிறருக்கு உபகாரம் செய்தவனுக்குப் புண்ணியம் வந்து சேரும். பிறரை துன்புறுத்தியவனுக்குப் பாவம் வந்து சேரும்.
- மகாபாரதம்
உழைத்துப் பாடுபடுகிறவர்களைக் கண்டால் தெய்வங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
- ரிக் வேதம்
உண்மையே பேசு. தெய்வங்கள் நிச்சயமாக சத்தியத்தைக் கடைப்பிடித்து ஒழுகுகின்றன. அவை சத்தியத்தால்தான் புகழ் பெறுகின்றன. உண்மையை உரைக்கும் வித்துவானும் புகழ் பெறுகிறான்.
- சதபதப் பிராம்மணம்
எல்லா உயிர்களும் என்னை நண்பனாகக் கருதட்டும். நானும் எல்லா உயிர்களையும் என் நண்பனாகக் கருதுவேனாக!
- யஜுர்வேதம்
தேரின் உருளை பல திசைகளிலும் சுழன்று செல்வது போன்று, செல்வமும் பலரிடம் போவதும் வருவதுமாக இருக்கிறது. அது என்றும் ஒரே மனிதனிடமோ ஒரே இடத்திலோ நிலைத்திருப்பதில்லை.
- ரிக் வேதம்
சத்தியம் என்ற ஓடம் தர்மாத்மாவைக் கரையேற்றுகிறது.
- யஜுர்வேதம்
அந்நியனோ நம்மவனோ, உற்றார் உறவினனோ, நண்பனோ பகைவனோ இவர்களில் எவராக இருப்பினும் ஆபத்தில் சிக்கியிருந்தால், அவர் துன்பப்படுவதைப் பார்த்து மனம் பொறுக்காமல் அவர் அதிலிருந்து விடுவிக்க முற்படுவதே தயை அல்லது கருணை எனப்படும்.
- அத்ரி ஸ்மிருதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.