வெள்ளிமணி

ஒற்றுமையை உணர்த்தும் திருநீலகண்டேசுவரர்!

DIN

இறைவன் ஒற்றுமையாக வாழவே மனித குலத்தைப் படைத்தான். ஆனால் இன்று ஆளுக்கொரு பகுதியாகப் பிடித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். ஒற்றுமையை வலியுறுத்தி நமக்குள் அன்பையும் நேசத்தையும் உருவாக்கவே ஆலயங்கள் அமைக்கப்படுகின்றன. அவ்வகையில் சென்னை, கூடுவாஞ்சேரி, ஆதனூரில் உள்ள கிருஷ்ணபுரியில், அருள்மிகு திரிபுர சுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு திருநீலகண்டேசுவர் சுவாமி ஆலயம் அமைக்கும் திருப்பணிகள் நடைபெறுகின்றன.
 இறை சிந்தனையின் முதல்கட்டமாக அருள்மிகு விநாயகர் பெருமானுக்கு ஸ்ரீ சர்வ மங்கள வல்லப மகா கணபதி சந்நிதி அமையப் பெற்றதோடு, அருள்மிகு திருநீலகண்டேசுவரர், அருள்மிகு திரிபுர சுந்தரி அம்மன், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர், சண்டிகேசுவர், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி மற்றும் துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களுக்கான சந்நிதிகள்அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் ஏழு அடி உயரத்தில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் சந்நிதியும் அமைக்கப்பட உள்ளது. நால்வர் சந்நிதி அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் பக்த ஆஞ்சநேயர் சந்நிதியும் உருவாகிறது.
 ஒவ்வொரு ஆண்டும் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் அறக்கட்டளையின் வாயிலாக நடத்தப்படுகிறது. தைப்பூச தினத்தன்று வள்ளலாருக்கு சிறப்பு பூஜைகளும் இரண்டாம் சனிக்கிழமைகளில் திருவாசகம் முற்றோதலும் தொடர்ந்து நடைபெறுகின்றது. மேலும் நித்திய பூஜைகள், மண்டல பூஜைகள், சங்கட ஹர சதுர்த்தி பூஜைகளும் தொடர்ந்து நடைபெறுகிறது.
 தொடர்புக்கு: 94446 08678/ 98410 26302.
 - எஸ். வரதராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT