வெள்ளிமணி

செப்பேட்டுத் திருமேனியுடன்  உருவாகும் திருமுறைத் திருக்கோயில்!

ஒரு முறை திருமுறை பாடினால் போதும்மறுமுறை கருவறை புகும்நிலை மாறும்

ஜி. சுந்தர் ராஜன்

ஒரு முறை திருமுறை பாடினால் போதும்
மறுமுறை கருவறை புகும்நிலை மாறும்

உலகில் தோன்றிய அனைத்து மதம், சமயங்களுக்கும் ஸ்தோத்திர நூல்கள் உள்ளன. சில சமயங்களுக்கே சாஸ்திர நூல்கள் உள்ளன. அவற்றுள் சைவத்திற்கு சாஸ்திரமும், ஸ்தோத்திரமும் வேறெந்தச் சமயத்திற்கும் இல்லாத வகையில் சிறப்பாக அமைந்துள்ளன. சாஸ்திரமாக மெய்கண்ட நூல்கள் என்று போற்றப்படுகின்ற சைவ சித்தாந்தமும், ஸ்தோத்திரமாக பன்னிரு திருமுறைகளும் ஞான ஒளி வீசி மிளிர்கின்றன. இந்த பன்னிரு திருமுறைகளை செப்பேட்டில் பதித்து திருமுறைக் கருவறை அமைத்து திருக்கோயில் எழுப்ப விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டுள்ள அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை முடிவு செய்து பணிகளை தொடங்கியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் 2001}இல் தொடங்கப்பட்ட அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை, அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும், அவரவர் அவதாரத் திருத்தலங்களில் திருக்கோயில் அமைக்கப்பட்டு  வருடாந்திர விழாவும், குருபூஜை விழாவும் நடத்தி வருகிறது. அறுபத்து மூவர் அறக்கட்டளை மூலம் 19 நாயன்மார்களுக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளனர். 5 நாயன்மார்களின் அவதாரத்தலம் வெளி மாநிலங்களில் உள்ளது. தற்போது மூன்று நாயன்மார்களுக்கு திருக்கோயில் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது பன்னிரு திருமுறைகளையும் செப்பேட்டில் பதித்து செப்பறைத் திருமுறைத் திருக்கோயில் அமைக்கும் பெரும் முயற்சியினை மேற்கொண்டுள்ளது. பன்னிரு திருமுறைகளை செப்பேட்டில் பதிப்பதற்கு 4 டன் செப்பு தேவைப்படுகிறது. 10 }ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார். திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களிலும், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்பட்டன.
பன்னிரு திருமுறைகளை செப்பேட்டில் பதித்து சிவலிங்க வடிவத்தில் திருமுறை கருவறை அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு செப்புத்தகடும் ஒரு கிலோ எடை கொண்டாதாகும். 20 செப்புத்தகடுகள் (பதிகங்கள்-  கொண்டது ஒரு புத்தகம். புத்தகத்தின் மேல் அட்டை 2 கிலோ. கீழ் அட்டை 2 கிலோ. சைடு லாக்}21 கிலோ. 20 பக்கங்கள் கொண்ட ஒரு செப்பேட்டின் மொத்த எடை 25 கிலோ. பன்னிரு திருமுறைகள் 155 புத்தகங்களாக வடிவமைக்கப்படவுள்ளது. ஒரு செப்பேடு புத்தகம் அமைக்க ரூ. 87,500 செலவாகிறது. ஒரு புத்தகத்திற்கான செலவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தலாம். திருமுறைத் திருக்கோயிலில் சைவ சமய உலகத்தில் சிறப்பாக என்றென்றும் விளங்கி அருள் பாலித்து வருகின்ற பெருமானுடைய தாமிரசபை வடிவில் திருமுறை கருவறை அமைக்கப்பட்டு, கோபுரக்கலசம் வரை  திருமுறைக் திருக்கோயில் முழுமையாக செப்புக்கவசத்தில் அமைக்கப்படவுள்ளது. மூலவராக பன்னிரு திருமுறைகளையும், திருசந்நிதியுள் செப்பேடுகளாக எழுந்தருளச் செய்து கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது.
மேலும் இத்திருக்கோயிலில் சைவத்தின் கண்ணான திருமுறைகளை கண்டெடுத்து அனைத்து திருக்கோயில்களில் திருமுறைகளை அரங்கேற்றிய திருமுறை கண்ட சோழ சக்கரவரத்தி ராஜராஜசோழனையும், நாயன்மார்களை உலகறிய திருத்தொண்டர் புராணத்தை அரங்கேற்றிய அநபாய சோழனையும் திருமுறை கருவறையின் துவார பாலகராக எழுந்தருளச் செய்யப்படவுள்ளது. மேலும் நால்வர் சந்நிதியும் அமைக்கப்படுகிறது. இக்கோயிலில் பன்னிருத் திருமுறைகளை அருளிச் செய்த 27 அருளாளர்களையும் கோயில் கோஷ்ட மூர்த்தமாகவும் எழுந்தருளச் செய்யப்படுகிறது. பெரிய புராணம் அருளிச் செய்த சேக்கிழார் பெருமான், சைவ சாத்திர நூல்களை அருளிச் செய்த சந்தானக்குரவர்கள் மெய்கண்டார், அருணந்திசிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் அமையப்பட உள்ளன.
சைவ சமயக் கொடைகளின் வரலாற்றை உலகுக்கு அளித்த பெருமக்களின் வரலாற்று குறிப்பை மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை நன்கு கற்று அறியும் வண்ணம், அவர்களுடைய சிறப்பும் சிறு குறிப்புகளாக திருமுறைக் கோயில் வளாகத்தில் இடம் பெறுகிறது. 
இக்கோயிலில் சமய நூலகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. திருமுறைக் திருக்கோயில் அமைப்பதற்கும், ஆனிதிருமஞ்சனம், ஆருத்ரா தரிசனத்தன்று திருமுறை திருமேனி எழுந்தருளி அருள்பாலிக்கின்ற மகாமண்டபம், அருளாளர்கள் சந்திதி அமைக்கவும், பக்தர்கள் அமர்ந்து வழிபாடு செய்ய மண்டபம் ஆகியவை அமைக்கவேண்டி உள்ளது.  
இத்திருக்கோயில் திருச்சி அருகே உள்ள விராலிமலை} மதுரை செல்லும் பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமுறை செப்பேடு தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருமுறை திருக்கோயில் திருப்பணியில் பக்தர்கள் பங்கு கொண்டு இறையருள் பெறலாம். 
தொடர்புக்கு: சிவ அ.சங்கர், அறுபத்து மூவர் 

திருப்பணி அறக்கட்டளை - 98424 88031/ 98947 47947.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT