நாம் பகவானின் நாமத்தை வாயாரப் பாடி, மனதில் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பழைய பாவங்களும், இனி நம்மிடம் வரயிருக்கும் பாவங்களும்கூட தீயில் போடப்பட்ட பஞ்சு போன்று அழிந்து போகும்.
- ஸ்ரீ ஆண்டாள், திருப்பாவை 5
நாம் பசுக்களைப் பாதுகாக்க வேண்டும்; பசுவை அடிக்கக் கூடாது; வெள்ளையாட்டையோ, செம்மறியாட்டையோ இம்சை செய்யக் கூடாது; வதைக்கக் கூடாது; இரண்டு கால்கள் உள்ள மனிதர்களையும் பறவைகள் முதலியவற்றையும் துன்புறுத்தக் கூடாது; ஒற்றைக் குளம்புள்ள குதிரை, கழுதை முதலிய பிராணிகளைக் கொல்லக் கூடாது; நாம் எந்த உயிருக்கும் இம்சை செய்யக் கூடாது.
- யஜுர் வேதம்
நீலமணிபோல சுடர்விடும் திருமேனி உடையவர் என்று புகழப்பெற்றவர் நம் பெருமான். அவருடைய திருநாமத்தை வாயால் சொல்லி உலகில் வாழுங்கள்.
- ஸ்ரீ நம்மாழ்வார், திருவாய்மொழி 4.1.5
ஞானம், அக்ஞானம் என்று இரண்டு பொருள்கள் இருக்கின்றன. இவை முறையே, ஜீவாத்மாவிற்கு முக்தியையும் பந்தத்தையும் அளிக்கின்றன. இவற்றில் ஞானத்திலிருந்து முக்தியும், அக்ஞானத்திலிருந்து கடுமையான பந்தமும் ஏற்படுகின்றன.
- வேதாந்த முழக்கம்
ஆத்மா எப்போதும் ஸத் வடிவமாக இருக்கிறது; அது ஞானமாகிய சித் வடிவமானது; அது துன்பத்தின் சுவடு ஒரு சிறிதும் இல்லாத ஆனந்த வடிவமானது. இந்த வகையில் ஆத்மா "ஸத்சித்ஆனந்தம் (சச்சிதானந்தம்)' என்ற ஸ்வரூப லட்சண பெயரால் அழைக்கப்படுகிறது.
- தத்துவபோதம்
"நாம் அளிப்பது மிகவும் குறைவு' என்ற எண்ணத்தில் நாணத்துடன், மற்றவர்களுக்குத் தானம் அளிக்க வேண்டும்.
- தைத்ரிய உபநிஷதம்
இந்த உலகத்தில் இறைவன், அனைவருக்கும் மனித உருவம் தாங்கியபடியே வந்து தன்னை காட்டி அருள்புரிகிறான்.
- திருமூலர்
பக்தி ஞானமாக உருமாற வேண்டும்; இறைவனிடம் பக்தி செலுத்துவதும், அவரை அறிந்துகொள்வதும் ஒன்றாகும். நாம், "இறைவனை நேசிக்கவும், அறியவும் எனக்குத் திறன் அளிக்க வேண்டும்' என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.
- தாயுமானவர்
ஞானம் பெற்றவனுக்கு பயம் இல்லை. அவன் ஞானியாகிவிட்டான். "தனது கவலைகள், பேராசைகள், துயரங்கள் ஆகிய எல்லாமே வீண்தான்' என்பதை அவன் நன்கு அறிந்தவன். ஆதலால் அவன் எது வந்தாலும் மனஅமைதியோடு இருப்பான்.
- புத்தர்
குடி, கோபம், பிடிவாதம், மதவெறி, வஞ்சகம், பொறாமை, தற்புகழ்ச்சி, பிறரை இகழ்வது, ஆணவம், தீய எண்ணங்கள், புலால் உண்ணுதல் ஆகியவைதான் தூய்மையின்மையாகும்.
- புத்தர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.