முகப்பு
வெள்ளிமணி

வியர்வை உலர்வதற்கு முன் கூலி!

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ஒருமுறை ரஸதிலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அமர்ந்தார்.  ""என்னிடத்தில் அடிமைகள் பலர் உள்ளனர்.  அவர்கள் என்னிடம் பொய் சொல்கின்றனர்; திருடுகின்றனர்.

Updated On : 18 டிசம்பர், 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:37 PM

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ஒருமுறை ரஸதிலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அமர்ந்தார்.  ""என்னிடத்தில் அடிமைகள் பலர் உள்ளனர்.  அவர்கள் என்னிடம் பொய் சொல்கின்றனர்; திருடுகின்றனர். என் உத்தரவை மீறி நடக்கின்றனர். இது அவர்களின் செயலாக இருக்கிறது.  இதனால், நான் அவர்களைத் திட்டுகிறேன்; சில சயமங்களில் அடிக்கிறேன். இப்போது கூறுங்கள், மறுமையில் அவர்களின் நிலையும், என்னுடைய நிலையும் என்னவாக இருக்கும்?'' என்று கேட்டார்.
இதனைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""மறுமையில் உன் அடிமைகள் செய்த மாறுபாடு, திருட்டு, பொய் ஆகியவற்றையும், உங்களது தண்டனையையும் கணக்கிட்டு பார்க்கப்படும்.  அவர்களின் குற்றங்கள் உனது தண்டனையின் அளவுக்கு சமமாக இருந்து விடுமேயானால், உனக்கு எவ்வித சிரமும் இல்லை.  அவ்வாறு இல்லாமல், உன்னுடைய தண்டனையின் அளவு அவர்களின் தீயச் செயல்களைவிட அதிகமாக இருந்தால் உம்மிடமுள்ள நன்மைகளை அவர்களுக்கு கொடுத்து நீதி வழங்கப்படும்'' என்று கூறிவிட்டு, 
""நாம் மறுமைநாளில் நீதியின் தராசை நிறுவுவோம். அந்த நாளில் சிறிதளவுகூட எவர் மீதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது.  குற்றமும் தண்டனையும் சிறிய கடுகின் அளவு இருப்பினும் அதனையும் நாம் கொண்டு வருவோம். நாம் கணக்கு கேட்பவர்களில் சிறந்தவர் ஆவோம் என அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளதை அறியமாட்டாயா?'' என்றார்கள். 
இதனைக் கேட்ட அம்மனிதர், ""யாரசூலல்லாஹ்!  நான்  என்னுடைய அடிமைகளை என்னிடமிருந்து விடுதலையாக்கி விட்டேன்'' என்று கூறியவாறு எழுந்து சென்றார்.
வேலையாட்கள் விஷயத்தில் நீதியைக் கையாள வேண்டும், அவர்களிடம் செய்துள்ள ஒப்பந்தப்படி கூலி கொடுப்பதும், சுமக்க முடியாத அளவு வேலைச் சுமையைக் கொடுக்காமலும் அல்லாஹ்விடம் பயந்து நடக்க வேண்டும்.  
"இன்று நமக்கு வேலைக்காரராக இருப்பவர், நாளை மறுமைநாளில் அல்லாஹ்விடம் முறையிடுபவராக இருக்கிறார்!' என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: "கூலியாளின் வியர்வை உலர்வதற்கு முன் அவருடைய கூலியைக் கொடுத்துவிடுங்கள். தன்னுடைய மனைவி மக்களின் பசியைத் தீர்ப்பதற்காக வேலை செய்யும் வேலையாட்களிடம், வேலையை வாங்கிவிட்டு, அதற்குரிய கூலியை கொடுக்காமல், "இன்றைக்கு வா! நாளைக்கு வா!' என்று இழுத்தடித்தால், அவனுடைய சிரமம் எப்படித் தீரும்?  ஒரு கூலியாளை அமர்த்தி, வேலையை வாங்கிவிட்டு அவனுடைய கூலியைக் கொடுக்காதவனுடன் நான் மறுமையில் வாதாடுவேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.