முகப்பு
வெள்ளிமணி

2021: ஆங்கிலப் புத்தாண்டில் ஏற்படும் பலாபலன்களின் சுருக்கம்

முதல் ஆறு மாதங்கள் தொழில்துறை சற்று மந்தமான நிலைமையில் இருக்கும். பிற்பகுதியில் தொழில்துறையில் விறுவிறுப்பாக முன்னேற்றம் உண்டாகும். தொழிலாளர்கள் தாங்களாகவே பொறுப்பாக நடந்து கொள்வார்கள். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

முதல் ஆறு மாதங்கள் தொழில்துறை சற்று மந்தமான நிலைமையில் இருக்கும். பிற்பகுதியில் தொழில்துறையில் விறுவிறுப்பாக முன்னேற்றம் உண்டாகும். தொழிலாளர்கள் தாங்களாகவே பொறுப்பாக நடந்து கொள்வார்கள். 

மக்களின் வாழ்க்கைத் தரமும் படிப்படியாக உயரத் தொடங்கும்.  பொருளாதாரம் படிப்படியாக உயர்ந்து நல்ல நிலைமையை எட்டி விடும். 

விவசாயத்துறையும் அதனுடன் சம்பந்தப்பட்ட துறைகளும் சேர்ந்தே வளரத் தொடங்கும். விவசாயிகள் உடனுக்குடன் மானியங்களைப் பெறுவார்கள். 

நமது பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் உயரும். பல கல்லூரிகள் சிறப்பான கல்வி மையங்களாக அறிவிக்கப்படும். இணையவழிக் கல்வி முறை பல நுட்பமான பாடப் பிரிவுகளிலும் தொடங்கப்படும்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் பல நுட்பமான விஷயங்கள் வெளிக்கொணரப்படும்.

நாடகம், திரைப்படத்துறை, பத்திரிகை, ஊடகம், சமூக வலைதளம் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உண்டாகும்.

அறிவுசார் காப்பீட்டுத் துறையில் நமது கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெறும். 

 கனரக வாகனங்கள், ரயில்வே மற்றும் பொதுத்துறைகள் இரட்டிப்பு வளர்ச்சி காணத் தொடங்கும். 

பகைவர்களும் ஒதுங்கி இருப்பார்கள். 

வெளிநாடுகளில் நமது பெயர், புகழ் உயர்ந்து காணப்படும். 

முழு கட்டுரையைப் படிக்க →