வெள்ளிமணி

அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

தினமணி

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

கடின உழைப்புக்குப் பிறகே வெற்றிகள் தேடி வரும். பண விவகாரத்தில் யாருக்கும் முன் நிற்க வேண்டாம்.  உடன்பிறந்தோரிடம் பாசம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள்.  வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புச் செலவுகள் கூடும். அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்கவும்.

கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். பெண்கள் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

குடும்பத்தில் அமைதி நிலவும். விரும்பும் விஷயத்துக்காகப் பொழுதைக் கழிப்பீர்கள்.  பெற்றோரின் ஆசி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வின் விளிம்பில் இருக்கிறார்கள். வியாபாரிகள் தேவையான பொருள்களை மட்டுமே வாங்கி விற்பனை செய்வார்கள்.  விவசாயிகள் புதிய குத்தகையில் லாபம் பெருக்குவார்கள்.

அரசியல்வாதிகள் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் கிடைக்கும். பெண்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்தைக் கூட்டிக் கொள்ளவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

புதிய செயல்களைச் செய்ய புத்துணர்ச்சி கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.  எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். தொழிலில் உடனிருப்போர் பக்கபலமாக இருப்பார்கள்.  

குறைசொல்வோரை உத்தியோகஸ்தர்கள் கண்டுகொள்ள வேண்டாம். வியாபாரிகள் கௌரவக் குறைவான செயல்களிலிருந்து தள்ளி இருக்கவும்.

விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். கலைத்துறையினரின் ஆசை நிறைவேறும்.

பெண்கள் தெளிவாகச் சிந்திப்பார்கள். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

செல்வாக்கு உயரும். அந்தஸ்தான மனிதர்களைச் சந்திப்பீர்கள். கடுமையாக உழைப்பீர்கள். சரியான நேரத்தில் உணவும் ஓய்வும் எடுத்துக் கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்கள் பிறருக்கு அறிவுரை கூறுவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து விற்பனை செய்வீர்கள்.

விவசாயிகள்  தானிய விற்பனையில் லாபத்தைக் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு தோற்றத்தில் மிடுக்கு கூடும்.

கலைத்துறையினரின் கனவுகள் நனவாகும். பெண்கள் விருந்தினர்களை நன்கு உபசரிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

நம்பிக்கையுடன் செயல்களை செய்வீர்கள்.  இதற்கு குடும்பச் சூழலும் சாதகமாக இருக்கும். பணவரவு இருக்கும். வாக்குறுதிகளைக் காப்பாற்றி விடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை நன்றாகச் செய்து முடிப்பார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுக்குப் பக்க பலமாக இருப்பீர்கள். விவசாயிகள்

புதிய குத்தகைகளைத் தேடி பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு சூழ்நிலைக்கேற்ற பலன் கிடைக்கும். கலைத்துறையினர் மேன்மையடைவார்கள்.

பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - 27.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தன்னடக்கத்துடன் இருப்பீர்கள். தைரியத்துடன் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.  கனிவாகப் பேசி கவருவீர்கள். பூர்விக சொத்துகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவார்கள். வியாபாரிகள் நன்கு பணியாற்றுவார்கள். விவசாயிகள் பழைய கடன்களை அடைத்துவிடுவார்கள்.

அரசியல்வாதிகள் சரியாகச் சிந்தித்துச் செயலாற்றுவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி கிடைக்கும்.  

பெண்கள் யோசனைகளைத் தவிர்க்கவும். மாணவர்கள் பிடிவாதங்களைவிட்டு பாடங்களைப் புரிந்து படிக்க வேண்டும்.

சந்திராஷ்டமம் - 28,29.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

சம்பந்தமில்லாத பிரச்னைகளுக்குக் குழம்புவீர்கள். தொழிலில் மாற்றங்களைச் செய்வீர்கள்.   வருவாய் சிறப்பாகவே இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்கான முயற்சிகளைக் கைவிட மாட்டார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்-வாங்கல் சிறப்பாக இருக்கும்.

விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்.

கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். பெண்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பார்கள். மாணவர்கள் விளையாட்டு நேரத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

சந்திராஷ்டமம் - 30,31,1.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சிரமத்துடன் வெற்றிகள் கிடைக்கும்.  எதிர்ப்புகளைப் பேச்சுத்திறனால் முறியடிப்பீர்கள். உடல் நலம், மனவளம் சிறப்பாக இருக்கும்.  சிலர் வசிக்கும் வீட்டை பழுதுபார்ப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் சாதகமாக நடந்துகொள்வார்கள். வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்கவும். விவசாயிகள் புதிய

கால்நடைகளை வாங்குவார்கள். அரசியல்வாதிகளின் தனித்தன்மை வெளிப்படும்.

கலைத்துறையினருக்கு பணவரவு சீராக இருக்கும். பெண்கள் உஷ்ண வார்த்தைகளைக் கொட்டாதீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்தவும்.

சந்திராஷ்டமம் - 2.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். லாபம் கிடைக்கும். உறுதியோடு செயல்களில் வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் புதிய நுணுக்கங்களைக் கற்று பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள். விவசாயிகள்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வார்கள்.  அரசியல்வாதிகள் வதந்திகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

கலைத்துறையினர் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களில் ஈடுபடுவார்கள். பெண்களின் கௌரவம் அந்தஸ்து கூடும். மாணவர்கள் சாதனைகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். சொத்துகளை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு புழு, பூச்சி பாதிப்புகள் குறையும். அரசியல்வாதிகள் ஆராய்ந்து முடிவெடுப்பார்கள்.

கலைத்துறையினரின் புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும். பெண்கள் பெரியோரைச் சந்தித்து ஆலோசனை பெறுவார்கள். மாணவர்கள் முக்கியத்துவம் கருதி செயல்படவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பதற்றமின்றி செயல்களைச் செய்வீர்கள். பழைய கடன்களை வசூலிப்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கூடும். சேமிக்கத் தொடங்குவீர்கள். அதனால்
பணவரவு இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மறைமுக எதிர்ப்புகளை எதிர்கொள்வீர்கள். வியாபாரிகள் லாபத்தை அள்ளுவார்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்க முன்பணம் அளிப்பார்கள்.

அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலைத்துறையினர் புதிய அனுபவங்களைப் பெறுவார்கள். பெண்களுக்கு செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தன்னடக்கத்துடன் இருப்பீர்கள். வழக்கு பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும்.

உத்தியோகஸ்தர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். வியாபாரிகள் நற்பெயரை எடுப்பார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்வார்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள்.

கலைத்துறையினர் மனதுக்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு பூர்விகச் சொத்துகளில் வருவாய் கிடைக்கும். மாணவர்கள் பொறுப்புடன் நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT