வெள்ளிமணி

பாம்பன் சுவாமிக்கு கோயில்..

DIN

ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் எனுமிடத்தில், சாத்தப்பப் பிள்ளை} செங்கமல அம்மையாருக்கு 1850}இல் மகனாகப் பிறந்தவர் அப்பாவு (பிற்காலத்தில் பாம்பன் சுவாமிகள்). சிறு வயதில் சஷ்டி கவசத்தை 36 முறை பாராயணம் செய்தவர். "கங்கையைச் சடையிற் பரித்து' என்று தொடங்கி, நூறு பாடல்களைப் பாடியவர். சேதுமாதவ ஐயர் என்ற பக்தர், அப்பாவுக்கு சுப்ரமண்ய சடக்கர மந்திரத்தை உபதேசித்தார். 1878}இல் காளிமுத்தம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர். 1891}இல் சண்முகக் கவசத்தையும் பாடினார்.

சுவாமிகள் சென்னையில் தங்கியிருந்தபோது, 1923}ஆம் ஆண்டு டிச. 27}இல் விபத்து ஒன்றில் சிக்கினார். சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, வயது காரணமாக அறுவைச்சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தயங்கினர். ஆனால், சண்முகக் கவசத்தைப் பாராயணம் செய்யும்படி சீடர்களிடம் சுவாமிகள் கூறவே, அவர்களும் பாராயணம் செய்தனர். 11}ஆவது நாள் இரவில், சுவாமிகள் எதிரே வானில் இரண்டு மயில்கள் தோன்றி நடனமாடின. மறுநாள் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க, எலும்பு கூடியிருந்தது. மருத்துவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். பொது மருத்துவமனையில் 11}ஆவது வார்டில் இந்த நிகழ்ச்சிக்கான பதிவைக் காணலாம்.

இப்படிப்பட்ட சிறப்புமிக்கவரான பாம்பன் சுவாமிகள் கோயில் சென்னை திருவான்மியூர் கலாúக்ஷத்ரா காலனியில் உள்ளது.

இந்தக் கோயிலின் மகா கும்பாபிஷேகம் ஜூலை 12 (வெள்ளிக்கிழமை) காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்கான யாக சாலை பூஜைகள் ஜூலை 7 முதல் தொடங்குகின்றன.

}மருத்துவர் கைலாசம் சுப்ரமணியம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT