வார பலன்கள் 
வெள்ளிமணி

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

இணையதளச் செய்திப் பிரிவு

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 29 - 4) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

நீடித்துக்கொண்டிருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடுள்ளவர்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளை ஆலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ப லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவீர்கள். பெண்கள் மனக்குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். மாணவ மணிகள் படிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட். 30, 31, செப்டம்பர் 1.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

நண்பர்கள் ஒத்துழைப்பு சிறப்பாகக் கிடைக்கும். நேர்மையாக நடந்துகொள்வீர்கள். கோர்ட் விவகாரங்களில் சாதகமாகத் தீர்ப்பாகும்.

உத்தியோகஸ்தர்கள் வேலையை குறித்த நேரத்தில் முடித்துவிடுவீர்கள். வியாபாரிகளுக்கு போட்டியாளர்களால் தொல்லை ஏற்படாது. விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் உத்தியுடன் காரியமாற்றுவீர்கள். கலைத்துறையினர் விமர்சனங்களைத் தாண்டி வேலை செய்வார்கள். பெண்மணிகள் யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். மாணவமணிகளுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 2, 3.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பழைய தவறுகளைத் திருத்திக்கொள்வீர்கள். தீயவர்களின் நட்பை விலக்கிவிடுவீர்கள். இறை சிந்தனை கூடும். தனித்தன்மை மிளிரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு கடன் சார்ந்த விண்ணப்பங்கள் பயனளிக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்}வாங்கல் சாதகமாகும். விவசாயிகள் நவீன இயந்திரங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்மணிகள் தற்பெருமையின்றிச் செயல்படுவீர்கள். மாணவ மணிகள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து உற்சாகமடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 4.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பெரியோர்களின் ஆசிகளைத் தேடிப்பெறுவீர்கள். தொழில் போட்டிகளைச் சமாளித்துவீடுவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு புது கூட்டாளிகளின் சேர்க்கை ஏற்படும். விவசாயிகள் சக விவசாயிகளின் பேச்சுக்கு மதிப்புக் கொடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் வெளி வட்டாரத்தில் சிந்தித்துப் பழகுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு பெற்றோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். மாணவ மணிகள் தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்களிடம் பணிபுரிபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அரசிடமிருந்து உங்கள் தொழிலுக்கு உதவி கிடைக்கும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைகளைக் கற்றுக்கொள்வீர்கள். வியாபாரிகள் தனித்துச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளை நேர்மையாக ஆற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பெண்மணிகள் எதிர்பாராத சுபச்செய்திகளைக் கேட்பீர்கள். மாணவ மணிகள் கவனம்

சிதறாமல் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை நடக்கும். சுபகாரியங்கள் நடைபெறும். பயணங்களால் நன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத போனஸ் கிடைக்கும். வியாபாரிகள் கடையை சிறப்பாகச் சீரமைப்பீர்கள். விவசாயிகள் அமோக விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கட்டளையை நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினர் கலைஞர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குவீர்கள். பெண்மணிகள் உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். மாணவமணிகள் பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

வருமானம் படிப்படியாய் உயரும். தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள். மனவலிமை கூடும். பெற்றோருடன் இணக்கமாக இருப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகள் வெளிப்படும் சூழல் உருவாகும். வியாபாரிகள் அனுபவமிக்கவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு வருமானம் கூடும்.

அரசியல்வாதிகள் புகழ் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அலைச்சல் குறையும். பெண்மணிகள் உடன்பிறந்தோருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். மாணவ மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்கள் தன்னம்பிக்கை, தனித்தன்மை கூடும். காரியங்கள் வெற்றி பெறும். மதிப்பு, மரியாதை உயரும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நட்புடன் நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்குப் பயணங்களில் ஆதாயம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வருவாய்கூடத் தொடங்கும். கணவர் குடும்பத்தினரிடம் பெண்கள் நற்பெயர் எடுப்பீர்கள். மாணவ

மணிகளுக்கு உடல், மனம் ஆரோக்யமாக இருக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வரவேண்டிய பணம் வந்து சேரும். தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பீர்கள். வியாபாரிகள் மற்றவர்களைக் கலந்தாலோசித்த பிறகே முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவீர்கள். கலைத்துறையினர் ஊக்கத்துடன் பணியாற்றுவீர்கள். பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவ மணிகள் விளையாட்டில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

நேர்முக, மறைமுக போட்டிகள் எதுவுமிராது. பொருளாதாரச் சிக்கல்தீர ஆலாசனை கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் பொருள்களை நேர்மையாக விற்பனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புச் செலவு கூடும்.

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களை அரவணைப்பீர்கள். பெண்மணிகளுக்கு இலக்கியத்தில் ஆர்வம் உண்டாகும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறையும். அரசு காரியங்களில் நிலவிய சிரமங்கள் தீரும். பெற்றோரின் ஆதரவு கூடும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரிகளுக்குக் கொடுக்கல் - வாங்கலில் லாபம் கிட்டும். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதுவிதமான தேடல் பிறக்கும். பெண்மணிகள் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பீர்கள். வருமானம் எதிர்பார்த்தபடி இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேன்மை காண்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு சக விவசாயிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையுடன் நடந்துகொள்ளும். கலைத்துறையினர் புதியவற்றைச் செயல்படுத்துவீர்கள். பெண்மணிகள் கணவரின் அன்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல பெயரெடுப்பீகள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் முதல்வராக வருவதற்கு அண்ணாமலை இதைச் செய்தாலே போதும்: செல்லூர் ராஜு

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

தமிழகத்தில் 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

SCROLL FOR NEXT