முகப்பு
உலகம்

சீக்கியரை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிக்கு விருது

அமெரிக்காவின் விஸ்கான்சின் குருத்வாராவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் போது உயிரை பணயம் வைத்து பொதுமக்களை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிக்கு அதிபர் ஒபாமா விருது வழங்கினார்.

Updated On : 13 மே 2013, 12:23 am IST
பகிர்:

அமெரிக்காவின் விஸ்கான்சின் குருத்வாராவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் போது உயிரை பணயம் வைத்து பொதுமக்களை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிக்கு அதிபர் ஒபாமா விருது வழங்கினார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஸ்கான்சின் குருத்வாராவில் புகுந்த வேட் மைக்கேல் என்ற நபர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவந்ததும் முதன்முதலாக அங்கு வந்த ஓக் கிரீக் பகுதியின் போலீஸ் அதிகாரி லெப்டினன்ட் பிரையன் மர்பி, பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றினார்.

Advertisement

Advertisement

தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் அடுத்தவர்கள் உயிரை காப்பாற்றுவதற்காக அவர் பாடுபட்டார். வேட் மைக்கேல் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயமடைந்தார்.

பிரையன் மர்பியை கெüரவிக்கும் வகையில் வாஷிங்டன் அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா விருது வழங்கிப் பாராட்டினார்.

இதே போல் பல்வேறு சம்பவங்களில் பொதுமக்களின் உயிரை காத்த போலீஸாருக்கும் விருதுகளை அதிபர் ஒபாமா வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.