முகப்பு
உலகம்

சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 26 பேர் பலி, 70 பேர் காயம்

சிரியாவில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

Updated On : 15 செப்டம்பர், 2015 at 9:02 AM
பகிர்:

சிரியாவில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

சிரியாவில் ஹசாக் என்ற இடத்தில் உள்ள காஷ்மன் மற்றும் மஹாட்டா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இரட்டைத் தற்கொலைத்  தாக்குதலில் ஒரு பெண் 2 குழந்தைகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்.

முதல் குண்டு வெடிப்பு வடக்கு புறநகரில் உள்ள காஷ்மன் நகரில்  வாகனம் ஒன்றில் வெடிக்கச் செய்துள்ளதாக சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சிலர் இறந்துள்ளதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

பின்னர், அரை மணி நேரம் கழித்து மஹாட்டா என்ற நகரில் தண்ணீர் லாரி ஓட்டுனரிடம் இருந்து மற்றொரு வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இந்த இரு தற்கொலை தாக்குதலினால் அங்குள்ள குழந்தைகள், பெண்கள் பீதியில் அலறி அடித்து ஓடினர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.