முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவரில் பயணிகள் பேருந்து ஒன்றில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On : 16 மார்ச், 2016 at 10:23 AM
பகிர்:

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பயணிகள் பேருந்து ஒன்றில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெஷாவரில் உள்ள மார்டான் நகரில் இருந்து புறப்பட்ட பயணிகள் பேருந்தில் இன்று காலை இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 15 பேர் காயமடைந்ததாக டான் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பேருந்து பலத்த சேதமடைந்ததாகவும், பேருந்தில் சிக்கியவர்களை உடனடியாக வெளியேற்றி லேடி ரீடிங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.