உலகம்

மினிபஸ்-லாரி மோதல்: பிரான்ஸில் 12 பேர் பலி

பிரான்ஸில் வியாழக்கிழமை நள்ளிரவு லாரியுடன் மினிபஸ் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.

நெய்வாசல் நெடுஞ்செழியன்

பிரான்ஸில் வியாழக்கிழமை நள்ளிரவு லாரியுடன் மினிபஸ் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
 இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஸ்விட்ஸர்லாந்தில் இருந்து போர்ச்சுகல் நோக்கி சென்ற மினிபஸ் மத்திய பிரான்ஸின் ஆலியர் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு லாரியுடன் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில், மினிபஸ்ஸில் பயணம் செய்த 12 பயணிகளும் பலியாகினர். அவர்கள் அனைவரும் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
 மினிபஸ் ஓட்டுநர் மற்றும் லாரியில் இருந்த இரு இத்தாலிய ஓட்டுநர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்தையடுத்து அப்பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை போக்குவரத்து தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

ஆக. 21 மதுரையில் TVK மாநில மாநாடு: Vijay அறிவிப்பு | செய்திகள் சில வரிகளில் | 05.08.25

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

SCROLL FOR NEXT