மதத்தில் இருந்து பயங்கரவாதத்தை பிரிக்க வேண்டும்: மோடி பேச்சு
மதத்தில் இருந்து பயங்கரவாதத்தை பிரிக்க வேண்டும், பயங்கரவாதம் என்பது குறிப்பிட்ட நாட்டின் பிரச்னை அல்ல, அது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு எதிரான சவால் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மதத்தில் இருந்து பயங்கரவாதத்தை பிரிக்க வேண்டும், பயங்கரவாதம் என்பது குறிப்பிட்ட நாட்டின் பிரச்னை அல்ல, அது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு எதிரான சவால் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அரசு முறைப் பயணமாக பெல்ஜியம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பிரஸ்ஸெல்ஸில் பெல்ஜியம் வாழ் இந்தியர்களிடையே உரையாற்றினார்.
அப்போது, பயங்கரவாதத்தால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் என்பது ஏதோ ஒரு நாடு மட்டும் எதிர்கொள்ளும் பிரச்னை அல்ல, அது ஒட்டுமொத்த மனித குலத்துக்கு எதிரான சவால்.
Advertisement
மதத்தில் இருந்து பயங்கரவாதம் பிரிக்கப்பட வேண்டும். எந்த மதமும் பயங்கரவாதத்தை போதிக்கவில்லை என்று மோடி பேசினார்.
முன்னதாக, பிரஸ்ஸெல்ஸில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.