முகப்பு
உலகம்

புதிய அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம்: சீனா அறிவிப்பு!

டொனால்டு டிரம்ப் தலைமையில் அமைய உள்ள புதிய அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என சீனா அறிவித்துள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:53 AM
பகிர்:

பீஜிங்: டொனால்டு டிரம்ப் தலைமையில் அமைய உள்ள புதிய அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என சீனா அறிவித்துள்ளது.

செவ்வாயன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஹிலாரியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே சீன வெளியுறவுத் துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்க்காகவும், இரு நாட்டு மக்கள் மற்றும் உலகத்தின் நலன் கருதியும் புதிதாக அமையவுள்ள அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம்.

அமெரிக்கா- சீனா இடையேயான உறவானது நீடித்த ஆரோக்கியமான ஒன்றாக அமைய தேவையான கூட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புவதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →