உலகம்

வெள்ளியன்று விண்வெளிக்கு பறக்கிறார் உலகின் வயதான விண்வெளி வீராங்கனை!

நாளை வெள்ளிக்கிழமை அன்று விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறக்க உள்ள அமெரிக்காவின் பெக்கி விட்சன் உலகின் மிக வயதான விண்வெளி வீராங்கனை... 

DIN

வாஷிங்டன்: நாளை வெள்ளிக்கிழமை அன்று விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறக்க உள்ள அமெரிக்காவின் பெக்கி விட்சன் உலகின் மிக வயதான விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில்பணிபுரியும் விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன் (56). உலக  நாடுகளின் கூட்டு முயற்சியினால் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார். இது இவரது மூன்றாவது விண்வெளி பயணமாகும். இதன் மூலம் உலகிலேயே மிக அதிக வயதில் விண்வெளி பயணம் செய்த முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.

எக்ஸ்பிடிஷன் 50 / 51 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பயணமானது ரஷ்யாவில் அமைத்துள்ள பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை நடைபெறுகிறது. அவருடன் ரஷ்யாவின் ஒலெக் னேவிட்ஸ்கி மற்றும் ஐரோப்பியா விண்வெளி மையத்தைச் சேர்ந்த தாமஸ் பெஸ்க்யூட் ஆகிய இருவரும் பயணிக்க உள்ளனர்.          

இந்த பயணத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் தலைமைப் பொறுப்பை இரண்டாவது முறையாக வகித்தவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்க உள்ளது.

இதற்கு முன்னதாக 2007-ஆம்  ஆண்டில், அமெரிக்காவின் பார்பரா மோர்கன் என்ற வீராங்கனை தனது 55-ஆம் வயதில் விண்வெளிக்கு பறந்ததே சாதனையாக இருந்து வந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT