உலகம்

மெக்காவை நோக்கி ஏவுகணை வீச்சு

DIN

இஸ்லாமியரின் மிகப் புனிதமான தலமான மெக்காவைக் குறி வைத்து யேமன் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீசியதாக சவூதி அரேபியா ராணுவம் தெரிவித்தது.
இது தொடர்பாக சவூதி ராணுவம் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
யேமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து ஏவுகணை வீசப்பட்டது. இஸ்லாமியரின் புனிதத் தலமான மெக்காவை இலக்கு வைத்து அந்த ஏவுகணை வீசப்பட்டது. ஆனால் அந்த ஏவுகணை மெக்காவிலிருந்து 65 கி.மீ. தொலைவில் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டது. அந்த ஏவுகணையால் சவூதியில் எந்த சேதமும் விளையவில்லை.
ஏவுகணை இடை மறித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது எங்கிருந்து வீசப்பட்டதோ, அந்த இடத்துக்கு எதிராக சவூதி கூட்டுப் படையினர் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தினர் என்று சவூதி ராணுவம் தெரிவித்தது. இந்நிலையில், ஜெட்டா விமான நிலையத்தைக் குறி வைத்து வியாழக்கிழமை இரவு ஏவுகணை வீசியதாக கிளர்ச்சியாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT