உலகம்

டுவிட்டரை கையகப்படுத்த டிஸ்னி நிறுவனம் பரிசீலனை

DIN

டுவிட்டர் சமூக வலைத்தள நிறுவனத்தை வால்ட் டிஸ்னி கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த டுவிட்டர் நிறுவனம் விற்பனை செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் அண்மையில் வெளியாகியது. இதையடுத்து, அந்த நிறுவனத்தை வாங்க வால்ட் டிஸ்னி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம் டுவிட்டர் பங்குகளின் விலை கணிசமான ஏற்றத்தைக் கண்டன.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு வால்ட் டிஸ்னி கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனம் ரூ.2 லட்சம் கோடிக்கு கைமாற உள்ளதாக மற்றொரு தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்துடன் ஒப்பிடும்போது டுவிட்டர் நிறுவன பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருவது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, டுவிட்டர் நிறுவனம் வெளியிட்ட தனது கடைசி காலாண்டு அறிக்கையில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் மட்டுமே அதிகரித்து 31.3 கோடியாக இருந்தது என்று தெரிவித்தது.
அதேசமயம், ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 170 கோடியாக உள்ளது. அந்நிறுவனத்துக்கு சொந்தமான படங்களை பகிர்ந்து கொள்ளும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 50 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும், டுவிட்டர் நிறுவனத்துக்கு விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாயும் போதுமான அளவுக்கு இல்லை என்று கருதப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால், டுவிட்டர் சமூக வலைதளத்தை அந்த நிறுவனம் விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டுவிட்டரின் இணை நிறுவனரான ஜாக் டார்ஸி வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் நிர்வாக் குழுவில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வால்ட் டிஸ்னி நிறுவனம் டுவிட்டரை கையகப்படுத்துவதன் மூலம் நேரடி விடியோ செய்திகள், திரைப்படங்கள் ஸ்ட்ரீமில் சேவையை வழங்க உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT