பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயார்: நவாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயார் என்று அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்
உலகம்பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயார்: நவாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயார் என்று அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயார் என்று அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் நவாஸ் ஷெரீஃப் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் விமானப் படை சார்பில் கைபர்-பாக்துன்குவாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் நவாஸ் ஷெரீஃப் பங்கேற்றுப் பேசியதாவது:
பாகிஸ்தான், அமைதியை விரும்பும் நாடு. பிற நாடுகளுடன், குறிப்பாக அதன் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதே பாகிஸ்தானின் கொள்கையாகும்.
அதேசமயம், பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம். நாட்டின் பாதுகாப்புப் படையின் மீது பாகிஸ்தானுக்கு முழு நம்பிக்கை உள்ளது. நவீன கால சவால்களை சந்திக்கும் வகையில் பாதுகாப்புப் படையினருக்குத் தேவைப்படும் ஆதரவை அரசு அளிக்கும் என்றார்.