உலகம்

பொறுப்பற்ற செயல்: சவூதி கண்டனம்

DIN

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவை பொறுப்பற்ற செயல் என சவூதி அரேபியா கடுமையாகச் சாடியுள்ளது.
சவூதி அரசவை சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இது தொடர்பாகத் தெரிவித்திருப்பது:
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவு மிகவும் வருந்தத்தக்கது. எந்த விதத்திலும் நியாயப்படுத்த இயலாத, பொறுப்பற்ற இந்தச் செயல் ஏற்படுத்தக் கூடிய கடுமையான பின்விளைவுகள் குறித்து சவூதி எச்சரிக்க விரும்புகிறது. பாலஸ்தீன மக்களின் சரித்திரபூர்வமான, நிரந்தரமான உரிமைகளுக்கு விரோதமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு இதனால் பெரும் குந்தகம் விளையும். ஏறத்தாழ எழுபதாண்டுகளாக இருந்த வந்த ஜெருசலேம் கொள்கையை டிரம்ப் அதிரடியாக மாற்றியுள்ளார். அமெரிக்கா தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சவூதி அரேபிய அரசவை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT