உலகம்

காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த 15 வீரர்கள் பலி

DIN

காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய தாக்குதலில் ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 15 வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
காங்கோவின் வடக்கு கிவு மாகாணத்தில் வியாழக்கிழமை கிளர்ச்சியாளர்கள் இந்தக் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினர். அண்டை நாடான தான்சானியாவிலிருந்து வந்த ஐ.நா. அமைதிப்படையினரை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில், அமைதிப்படையைச் சேர்ந்த 15 வீரர்களும், காங்கோ ராணுவத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். 
மேலும், 53 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வடக்கு கிவு மாகாணத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் உகாண்டா இஸ்லாமிய கிளர்ச்சிக் குழு இந்த ஈவு இரக்கமற்ற தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
காங்கோ தாக்குதலுக்கு ஐ.நா. பொது செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன், அமைதிப்படையினருக்கு எதிரான மனிதாபிமானமற்ற இந்த செயல் போர்க் குற்றத்துக்கு ஒப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

SCROLL FOR NEXT