உலகம்

வங்கதேசப் பிரதமருடன் வெளியுறவுச் செயலர் சந்திப்பு

DIN

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
சீன பயணத்தை முடித்துக் கொண்டு இருநாள் பயணமாக வங்கதேசத்துக்கு சென்ற ஜெய்சங்கர், தலைநகர் டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துப் பேசினார். அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், இந்தியா-வங்கதேசம் இடையேயான உறவின் தற்கால நிகழ்வுகள் குறித்து ஆலோசித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து வங்கதேச அரசின் ஊடகத் துறை துணை செயலாளர் நஸ்ரூல் இஸ்லாம் கூறியதாவது:
இருநாடுகளின் எல்லையில் நிலவி வந்த பிரச்னைகள் உள்பட பல்வேறு விவகாரங்களையும் இருநாடுகளும் பேசித் தீர்த்துக் கொண்டுள்ளன. இதேபோல எதிர்காலத்திலும் பிரச்னைகள் அனைத்தும் அமைதியாகப் பேசித் தீர்க்கப்பட வேண்டுமென்று ஜெய்சங்கரிடம், ஷேக் ஹசீனா கூறினார்.
வரும் ஏப்ரல் மாதம் ஷேக் ஹசீனா இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே ஹசீனா, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், தீஸ்தா நீர் பகிர்வு பிரச்னை காரணமாக, அவரது பயணம் அப்போது ஒத்திவைக்கப்பட்டது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT