உலகம்

பப்புவா நியூ கினியா தீவுப்பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி அபாயம்? 

DIN

வெல்லிங்டன்: பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி நாடான பப்புவா நியூ கினியா தீவுக்கு கூட்டத்தில் உள்ள  போகைன்வில் தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுனாமி ஏற்படுமோ என்ற அச்சத்தில் அங்குள்ள மக்கள் உள்ளனர்.

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவு கூட்டத்தில் போகைன்வில் தீவும் ஒன்று. அங்கு இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அங்கே இருக்கும் அராவா பகுதியில் இருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கமானது , தரைப்பகுதியில் இருந்து 154 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் எழக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT