முகப்பு
உலகம்

'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் நடித்து புகழ்பெற்ற நாயகன் ரோஜர் மூர் மரணம்! 

பிரபல உளவாளி கதாபாத்திரமான 'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் நடித்து புகழ்பெற்ற திரைப்பட நாயகன் சர் ரோஜர்மூர் ...

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:35 PM
பகிர்:

கலிபோர்னியா: பிரபல உளவாளி கதாபாத்திரமான 'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் நடித்து புகழ்பெற்ற திரைப்பட நாயகன் சர் ரோஜர்மூர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

உலகமெங்கும் திரைப்பட ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த உளவாளி கதாபாத்திரமான 'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர் சர் ரோஜர்மூர். இவர் கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றார். இந்த காலக்கட்டத்தில் அவர் 7 திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார்.

படங்களில் நடிப்பதை நிறுத்திய பின்பு சுவிட்ஸர்லாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரோஜர் மூர் புற்றுநோய் காரணமாக இன்று மாலை உயிரிழந்தார்.  இந்த தகவலானது அவரின் குடும்பத்தினர் முலமாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →