முகப்பு
உலகம்

கனடாவில் 'ஒரு நாள் பிரதமர்' ஆன ஐந்து வயது சிறுமி! 

கனடாவில் பள்ளிச் சிறுமிகளுக்கு நடந்த கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற 5 வயது சிறுமி ஒருத்தி ஒரு நாள் பிரதமர் ஆன விநோதம் நிகழ்ந்துள்ளது

உலகம்

கனடாவில் 'ஒரு நாள் பிரதமர்' ஆன ஐந்து வயது சிறுமி! 

கனடாவில் பள்ளிச் சிறுமிகளுக்கு நடந்த கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற 5 வயது சிறுமி ஒருத்தி ஒரு நாள் பிரதமர் ஆன விநோதம் நிகழ்ந்துள்ளது

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:37 PM
பகிர்:

ஓட்டாவா: கனடாவில் பள்ளிச் சிறுமிகளுக்கு நடந்த கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற 5 வயது சிறுமி ஒருத்தி ஒரு நாள் பிரதமர் ஆன விநோதம் நிகழ்ந்துள்ளது.

கனடாவில் ஒருநாள் பிரதமர் ஆனால் என்ன செய்வீர்கள் என்று பளிச் சிறுமிகளுக்கான கட்டுரை போட்டி ஒன்று நடந்தது. அதில் பெல்லா மூஸ் என்ற 5 வயது சிறுமி வெற்றி பெற்றாள். அதை தொடர்ந்து அவள் ஒட்டாவாவில் உள்ள கனடப் பிரதமர் ஐஸ்டின் டிருயூவின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டாள்.

அவளை பிரதமர் ஐஸ்டின் டிருயூ நேரில் வந்து வரவேற்று அழைத்து சென்று இருக்கை ஒன்றில் அமர வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கு அவள் ஒரு நாள் பிரதமர் ஆனாள்.

பிரதமரானவுடன் அவள் தான் ஒரு கோட்டை கட்ட வேண்டும் என உத்தரவிட்டாள். அதன்படி ஜஸ்டின் டிருடியோ அவளுக்கு தலையணைகள், நாற்காலிகள், மேஜை மற்றும் பலவித ஓவியங்களுடன் கூடிய போர்வையால் கோட்டை ஒன்றை அளித்து, சிறுமியை மகிழ்வித்தார்.

இவ்வாறு சிறுமியின் ஒருநாள் பிரதமர் கனவு நிறைவேறியது.

முழு கட்டுரையைப் படிக்க →