உலகம்

இங்கிலாந்தில் பதுங்கியுள்ள 23,000 தீவிரவாதிகள்: உளவுத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்! 

DIN

லண்டன்: சமீபத்தில் இங்கிலாந்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மான்செஸ்டர் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதும் உளவுத்துறை நடத்திய அதிரடி ஆய்வில், அங்கே 23 ஆயிரம் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கடந்த 22-ம் தேதி, பிரபல அமெரிக்க பாப் பாடகி அரினா-வின் இசை நிகழ்ச்சி நடந்த அரங்கத்தில், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 119 பேர் காயமடைந்தனர்.

போலீசாரின் விசாரணையில் இந்த தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த, லிபியாவைப் பிறப்பிடமாகக் கொண்டு, இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த 22 வயதான சல்மான் அபேதி என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 11 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தற்பொழுது முகமது அபிதியின் சிசிடிவி கேமராவில் பதிவான படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தின் ராணுவ உளவுத்துறை அந்நாடு முழுவதும் நடத்திய விரிவான ஆய்வில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இவர்களில் சந்தேகப்படும்படியான 3 ஆயிரம் பேர் முதல் கட்ட விசாரணையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர் . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT