இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவு
இந்தோனேசியாவின் தென்மேற்குப் பகுதியான சுலவேசி தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:08 PM
ஜகார்தா: இந்தோனேசியாவின் தென்மேற்குப் பகுதியான சுலவேசி தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பலுவின் தென்மேற்குப் பகுதியான சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளதாகவும், 49 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கி சேதம் ஏற்பட்டது. அவசர அவசரமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நிலஅதிர்வு காரணமாக 3 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement
சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.