மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தாஜ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக 166 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அஜ்மல் கசாப் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு காரணமாக இருந்ததாகக் கூறி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத்-உத்-தவாத் அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீது மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் அவன் தலையை எடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகையை அமெரிக்கா அறிவித்தது.
எனவே இவ்விகாரம் தொடர்பாக ஹஃபீஸ் சயீத் 2008-ம் ஆண்டில் பாகிஸ்தான் அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான். இதையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டான்.
இவ்விகாரம் தொடர்பான வழக்கு பாகிஸ்தானில் உள்ள லாஹூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சயீதின் தண்டனைக் காலம் முடிவடைவதால் அவன் மீது வேறு எந்த வழக்கும் இல்லாத காரணத்தால் விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.