உலகம்

வட கொரியாவுக்கு ரஷியா ரகசிய இணையதள வசதி

DIN

வட கொரியா மீது ஐ.நா. கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு ரகசிய இணையதள வசதியை ரஷியா அளித்து வருவது தெரிய வந்துள்ளது.
ஏற்கெனவே ஓர் இணையதள இணைப்பை வட கொரியாவுக்கு சீன நிறுவனமான யூனிகாம் வழங்கியுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் அது செயல்பட்டு வருகிறது. அதன் வழியாக மட்டுமே இணையதள உலகுடன் வட கொரியா தொடர்பு கொண்டுள்ளது. ஐ.நா.வின் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகள் அண்மையில் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ரஷியாவும் ஓர் இணையதள இணைப்பை வட கொரியாவுக்கு வழங்கியிருப்பதாக சர்வதேச இணைய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது.
மிகக் குறுகிய அளவு இணையதள வசதி உள்ளபோதிலும் வட கொரியாவில் உள்ள சுமார் 6,800 'இணைய வீரர்கள்' உலகம் முழுவதுமுள்ள இணையதள வசதிகளை ஊடுருவித் தாக்கி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT