உலகம்

பயங்கரவாத அமைப்புகளை பட்டியலிட்ட பிரிக்ஸ் தீர்மானத்தை நிராகரித்தது பாகிஸ்தான்

DIN

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளைப் பட்டியலிட்ட பிரிக்ஸ் மாநாட்டின் தீர்மானத்தை நிராகரிப்பதாக பாகிஸ்தான்அறிவித்துள்ளது.
சீனாவின் ஜியாமென் நகரில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. அப்போது, பயங்கரவாத அமைப்புகளைக் கண்டித்து பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இதில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளும் இடம் பெற்றிருந்தன. இது பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்தது.
இந்நிலையில், இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் குர்ராம் தஸ்தகீர் பேசியதாவது:
பயங்கரவாத அமைப்புகள் தொடர்பாக பிரிக்ஸ் மாநாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தை பாகிஸ்தான் நிராகரிக்கிறது. பாகிஸ்தான் எந்த காலகட்டத்திலும் தனது மண்ணில் பயங்கரவாதிகளுக்கு இடமளித்தது கிடையாது.
பயங்கரவாத அமைப்புகள் அனைத்துக்கு எதிராகவும் பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஒரு சில அமைப்புகள் வேண்டுமானால் தப்பியிருக்கலாம். ஆப்கானிதானில் 40 சதவீத பகுதிகள் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ளன என்றார்.
அண்மையில், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துப் பேசியது குறித்து தஸ்தகீர் கூறுகையில், 'இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பேசி வருகிறார். அனைத்து பிரச்னைகளையும் அமைதியான முறையில் பேசித் தீர்த்துக் கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது. இதையும் மீறி அமெரிக்கா வேறு தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது ஸ்திரத்தன்மையை பாதிக்கும். பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT