உலகம்

ராணுவத்தில் பணிபுரியும் கர்ப்பிணி வீராங்கனைகளுக்கு புதிய சீருடைகள் தரப்பட்டன! எங்கே?

சினேகா

ஜெர்மனியில் ராணுவத்தில் பணிபுரியும் வீராங்கனைகள் கர்ப்ப காலத்தில் இறுக்கமான உடைகளை அணிவதில் சிரமம் உள்ளதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சோதனை அடிப்படையில் கர்ப்பிணிகளான 80 வீராங்கனைகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சீருடைகள் வழங்கப்பட்டது.

அது திருப்திகரமாக இருக்கவே மேலும் 500-க்கும் மேற்பட்ட புதிய சீருடைகளை தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது ஜெர்மனி ராணுவம். தற்போது ஜெர்மனி ராணுவத்தில் 20,000-ம் மேற்பட்ட வீராங்கனைகள் பணிபுரிகிறார்கள். அவர்களுள் 2 சதவிகிதத்தினர் கர்ப்பவதிகளாக உள்ள நிலையில் அவர்களுக்கான சீருடையில் மாற்றம் தேவைப்பட்டது.

ஜெர்மனி ராணுவத்தில் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சராசரியாக 2 சதவிகிதம் பேர் கர்ப்பிணிகளாக இருப்பதாகக் கூறியுள்ள ஜெர்மனி ராணுவம், ஏற்கெனவே சோதனை அடிப்படையில் கர்ப்பிணி வீராங்கனைகளுக்கான பிரத்யேக சீருடைகளை வழங்கியது. அந்த சீருடைகள் திருப்திகரமாக இருப்பதாக பயன்படுத்தியவர்கள் தெரிவித்ததை அடுத்து, முதற்கட்டமாக 500 சீருடைகளை வாங்க முடிவு செய்துள்ளதாக ஜெர்மனி ராணுவம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT