வடகொரியாவுக்கு அமெரிக்கர்கள் செல்ல தடை நீட்டிப்பு
வடகொரியாவுக்கு அமெரிக்கர்கள் செல்வதற்கான தடையை நீட்டித்து அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வடகொரியாவுக்கு அமெரிக்கர்கள் செல்வதற்கான தடையை நீட்டித்து அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,
வடகொரியாவுக்கு அமெரிக்கர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 1-ஆம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், இந்த தடை நீட்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசுக்கு வெளிநாடுகளிலும் அமெரிக்க மக்களின் பாதுகாப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.
Advertisement
எனவே தான் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வடகொரியாவுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமென்றால் குறிப்பிட்ட பணிகளின் அடிப்படையில் அமெரிக்க அரசின் அனுமதியுடன் மட்டுமே பயணிக்க வேண்டும். அதற்காக சிறப்பு விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார மாணவர் ஓட்டோ வார்ம்பீ (22), கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு குழுவுடன் வடகொரியா சென்றுள்ளார். அப்போது போலியான குற்றச்சாட்டுகளின் கீழ் அந்த மாணவர் கைது செய்யப்பட்டு வடகொரிய நீதிமன்றத்தால் 15 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் 2017-ஆம் ஆண்டு அந்த மாணவர் விடுவிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு மீண்டும் திரும்பினார். கோமா நிலையில் இருந்தவர் அமெரிக்கா திரும்பிய ஒரே வாரத்தில் உயிரிழந்தார். ஆனால், நச்சுத்தன்மை தொற்று காரணமாகவே அந்த மாணவர் உயிரிழந்ததாக வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.