முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5-ஆக பதிவு

இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் என்ற தீவின் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது என

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:48 PM
பகிர்:

லம்பாக்: இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் என்ற தீவின் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நள்ளிரவு 1.02 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 
 
இந்தோனேசியா பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு பகுதியான ரிங்க் ஆஃப் ஃபயர் என்ற இடத்தில் உள்ளது, இது அடிக்கடி நலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்து பகுதியாக உள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட  பாதிப்புகள் குறித்த உடனடி தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →