உலகம்

பேஸ்புக் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: காலி செய்யப்பட்ட அலுவலகங்கள்

ANI

லாஸ் ஏஞ்சலீஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள பேஸ்புக் நிறுவன அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து குறிப்பிட்ட சில அலுவலகங்கள் காலி செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. 

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுத்திவனத்தின் தலைமையகமானது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மென்லோ பார்க் பகுதியில் அமைநதுள்ளது. அந்த அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் நேரப்படி செவ்வாயன்று மிரட்டல் வந்துள்ளது. 

இதைத் தொடந்து மென்லோ பார்க் பகுதி காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டதையடுத்து, சான் மேட்யோ பிரிவு வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டதாக, காவல்துறை வட்டாரங்கள் உறுதி செய்தன. 

அதேபோல் பேஸ்புக் நிறுவன அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையும், அங்கு குறிப்பிட்ட சில அலுவலகங்கள் காலி செய்யப்பட்டதையும், அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரும் உறுதிப் படுத்தியுள்ளார்.     

மேலதிக விபரங்கள் தெரிய வரவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT